பேச்சை மாற்றிய ட்ரம்ப்! கோபத்தின் உச்சியில் ஈரானியர்கள்
ஈரான் அதிகாரிகள், கொலைகளை நிறுத்துவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் உடைய இந்த திடீர் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த போராடும் ஈரானியர்கள், அவரது வார்த்தைகளை நம்பி வீதிக்கு வந்ததாலேயே இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த 5,000 பேரின் மரணத்திற்கு டிரம்ப்பே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
"ட்ரம்ப் எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்திவிட்டு, இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டார்" என்று தெஹ்ரான் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாகத் தொடங்கிய போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
இதில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போராட்டம் தீவிரம்
இதற்கிடையே அமெரிக்க ட்ரம்ப், "போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு, விரைவில் உதவி கிடைக்கும்" என்று ஏற்றிவிட்டார்.
தங்கள் நாட்டு விவகாரத்தில் ட்ரம்ப் தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அரசு எச்சரித்தது.

போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், தற்போது ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri