சீகிரியா சென்ற வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி! உச்சியை காண 11000 ரூபா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போக்குவரத்து, பொருட்கள் கொள்வனவு, சுற்றுலா தளங்களை பார்வையிடல் போன்ற விடயங்களில் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்பட்டு அதிகளவான பணம் வலிசூலிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதுபோன்று சீகிரியா மலையில் ஏறுவதற்காக சென்ற வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து வருவதாக சுற்றுலா வழிகாட்டிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் சிறந்த சுற்றுலா மாதமாக இருந்தாலும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சிலரின் இவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam