திருகோணமலையை புகழும் பிரான்ஸ் நாட்டு யுவதி(Video)
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிய வருகின்றது.
குறிப்பாக நாட்டின் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
பல விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டவர்கள் வருகை
அதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீர் ஊற்று, நிலாவெளி கடற்கரை, திருகோணேஸ்வரர் ஆலயம், புராமலை மற்றும் மார்பில் கடற்கரை ஆகிய முக்கிய இடங்கள் காணப்படுவதுடன் இயற்கை வளங்கள் மட்டுமல்லாது மான்களும் செரிந்து வாழக்கூடிய இடமாக திருகோணமலை காணப்படுகிறது.
இந்நிலையில் மான்களை பார்வை இடுவதற்கு திருகோணமலைக்கு வெளிநாட்டவர்கள் அதிகமாக வருகை தருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த யுவதி ஒருவர் லங்கா ஸ்ரீ ஊடக வலையமைப்பிற்கு தமது வருகை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |