இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த மாணவர்களின் செயல்
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தென்னிலங்கையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் இருந்து வந்த ஐரோப்பிய பல்கலைக்கழக இளைஞர்கள் அக்குரள சுற்றுலா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடற்கரையில் உள்ள பெருமளவிலான கழிவு
அங்கு கடற்கரையில் உள்ள பெருமளவிலான கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இலங்கை மக்களால் அசுத்தமடைந்த கடற்கரைகளை சுத்தப்படுத்துவதற்காக இந்த வெளிநாட்டு பல்கலைக்கழக இளைஞர்கள் தன்னார்வத்துடன் அங்கு வந்துள்ளனர்.
இதில் கலந்து கொண்ட வெளிநாட்டு இளைஞர்கள் கூறுகையில், இவ்வளவு அழகான கடற்கரையை கொண்ட இலங்கையின் கடற்கரைகளை கழிவுகளை கொட்டாமல் பாதுகாப்பது இலங்கை குடிமக்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |