புலம்பெயர் தமிழரின் கனவு தேசமாக விஸ்வரூபம் எடுக்கும் இயக்கச்சி (Video - Photos)
இலங்கையில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சுற்றுலாதலம் என்றால் அது கிளிநொச்சி- இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha Organic Farm ஆகும்.
150 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒர் “புதிய உலகம்“ என அங்கு சென்றுவரும் சுற்றுலாப்பயணிகள் வர்ணிக்கின்றனர் என்றால் மிகையாகாது.
அந்த உலகத்தை உருவாக்கியவர் புலம்பெயர் தமிழ் சர்வதேச தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார்.
ஒரு தமிழன் பார்க்க, அனுபவிக்க, அனுபவித்து பெருமிதம்கொள்ள நினைக்கின்ற அத்தனையுமே ReeCha Organic Farmல் அமைந்திருக்கின்றது.
விதம் விதமான விலங்குகள், விவசாய உற்பத்திப் பண்ணைகள், உடல் உள வளர்ச்சிக்கான விளையாட்டுக்கள், தமிழ் மக்களுக்கு நன்கு பரிட்சயமான விமானங்களின் மாதிரிகள், மினியேச்சர்கள், நீச்சல்குளம், நீர்தடாககங்கள் என்பன அமைந்துள்ளது.
றீ(ச்)ஷா பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
ஏன் சூரிய ஒளி புக முடியாத அளவில் காடு கூட பாதுகாப்பாக அங்கு உருவாக்கிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழர்களில் பாரம்பரியமான சுவையான ஆராக்கியமான உணவுகளை அங்கு பெற்றுகொள்ள முடியும். மரை, காட்டுப்பன்றி, காடை உட்பட விதம் விதமான உணவுகளையும் இங்கு சுவைக்கலாம்.
'உணவு இறைமை' (Food sovereignty)என்பது எமக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுவகைகளை நாமே உற்பத்தி செய்து, அவற்றைப் பாதுகாத்து விநியோகிப்பது. உணவில் யாரையும் நம்பியிராமல் தன்னிறைவு காண்பது. இதனைத்தான் 'உணவு இறைமை' அல்லது Food sovereignty என்று கூறுவார்கள்.
தமிழ் மக்களுக்கான 'உணவு இறைமையை' நோக்கிய ஒரு கட்டுமாணத்தை உருவாக்கிவருவதுதான் இந்த ReeCha Organic Farmஇன் சிறப்பான கருத்துருவாக்கம் ஆகும்.
உதாரணத்திற்கு யாழ். குடாவில் நாளாந்தம் சராசரியாக ஒரு இலட்சம் கோழி முட்டைகள் பாவிக்கப்படுகின்றன. பல ஆயிரம் கிலோ கோழி இறைச்சி வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுவருகின்றன. ஆனால் அவை அத்தனையும் எமது பிரதேசத்திற்கு வெளியே உள்ள இடத்தில் இருந்து, எமது மண்ணிக்கு அன்னியமான ஒரு தரப்பிடம் இருந்துதான் யாழ்பாணத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது.
மக்களின் அன்றாட உணவுத் தேவையை அந்த மக்களே உற்பத்திசெய்துவிடும் ஒரு நிலை உருவாகிவிட்டால், தாம் உற்பத்தி செய்யும் உணவை தானும் பெற்று மற்ற மாகாணங்களுக்கு பகிர்தளிக்கும் ஒரு வளர்ச்சி நிலையை அந்த மக்கள் அடைந்துவிடலாம்.
இங்கு தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளப்பறியது.
இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பும் இங்கு எழுதப்பட்டுள்ளது.
எமது சிறார்களின் மனங்கவர்ந்த இடமாக உள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணையில் அங்குள்ள மிக பிரமாண்டமான தமிழ் மன்னர்களின் உருவப்படங்களை காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும். பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும்.
இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான் இந்த றீ(ச்)ஷா பண்ணயின் நோக்கமாக அமைந்துள்ளது.
பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடும் உயரிய பணியை எமது றீ(ச்)ஷா பண்ணை செய்து வருகின்றது.
இந்த உயரி முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும். இது எமது தமிழரின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியாகவும் அமைகின்றது.
ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி பலரது வாழ்வாதாரமும் உயர்த்தப்படுகின்றது.
தமிழர் பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை தமிழர்களின் வரலாறு பேசும் ஓர் பிரமாண்மான சுற்றுலாத்தலமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மண்ணையும் மக்களையும் மனதார நேசிக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவரால் இப்படி ஒரு சாதனையை செய்ய முடியும் என்றால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் நினைத்தால் எத்தனை சாதனைகளை தமிழர் பகுதியில் நிலை நாட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக றீ(ச்)ஷா பண்ணை திகழ்கின்றது.




