இரவு பொருளாதாரம்: நாட்டில் மதுபானக் கடைகளை 24 மணி நேரமும் திறக்க வேண்டும்
இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபானசாலைகள், பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரவு பொருளாதாரம்
”இரவு 10 மணிக்கு மேல் இந்த இடங்கள் மூடப்பட்டால், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் பணம் எப்படி செலவாகும், இரவு பொருளாதாரம் இல்லை என்றால், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பணத்தை செலவிட மாட்டார்கள்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத் துறையின் மூலம் அதிகபட்ச வருமானம் பெற, மதுபானக் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும்.
இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவில் மது அருந்த விரும்பினால், அதை வாங்க இடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam