இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அழகிகள்! டயானா கமகேவின் அதிரடி அறிவிப்பு
80 நாடுகளைச் சேர்ந்த அழகிகளில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.
80 அழகிகள் இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
மிஸ் டூரிசம் வேர்ல்ட்
மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தலைமையில் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, ஹபரணை, எல்ல, அறுகம்பே, மிரிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிஸ் டூரிசம் வேர்ல்ட் ஃபைனல் 2022 இன் உலகளாவிய இயக்குனர் டேவிட் சிங்கும் நாட்டுக்கு வரவுள்ளார்.
இந்த 80 அழகிகள் இந்த இரண்டு வாரங்களில் இலங்கை முழுவதும் பயணம் செய்யும் போது புகைப்படங்களையும் கருத்துக்களையும் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் இலங்கையின் சுற்றுலா சந்தைப்படுத்துதலில் இது மிகவும் திறமையான படியாக இருக்கும் என்றும் இறுதிப் போட்டியில் சிறந்த 5 புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
