ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறை சார்பில் இடம்பெற்ற கண்காட்சி
மதுரையில் ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக சுற்றுலா துறையின் சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி
இந்த கண்காட்சியில் ஸ்ரீலங்காவின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுற்றுலா துறையின் உதவி இயக்குனர் சிராணிகெராத் மற்றும் மல்காந்திவெல்லகலா ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரி தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக தென்தமிழகத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுரை சென்னை கோவை போன்ற நகரங்களில் ஸ்ரீலங்கா சுற்றுலாவை மேம்படுத்த கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ஸ்ரீலங்காவில் இருந்து 40ற்கும் மேற்பட்ட சுற்றுலா முகவர்கள் மற்றும் தென் தமிழ்நாடு சுற்றுலா சங்கத்தின் சுற்றுலா நிர்வாகிகள் கலந்து கொண்டு ஸ்ரீலங்காவின் சுற்றுலாவில் உள்ள சிறப்பம்சங்களில் தெரிந்து கொண்டனர்.
ஸ்ரீலங்காவின் சுற்றுலாவின் மேம்படுத்தும் விதமாக ராமாயணம் சுற்றுலா தலைமன்னாரியிலிருந்து கண்டி வரை கோவில்கள் அதிகமாக உள்ளதாகவும் யாழ்ப்பாணம் சாப்னா பகுதியை மேம்படுத்தும் விதமாக திருநள்ளாறு முருகன் கோவில் காங்கேசன் கோவில் மக்களிடம் பிரசித்தி பெற்றது எனவும் சுற்றுலாவில் தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்கும் எனவும் மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு மணி நேரத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றுவர ஸ்ரீலங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது என கூறினார்.