அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த வருடம் இதுவரையான நாட்களில் நாட்டுக்கு மொத்தம் 1.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி,
நேற்று (07) நிலவரப்படி மொத்தம் 1,604,018 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான இந்தியர்கள்..
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 37,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
செப்டம்பரில், இந்தியாவில் இருந்து 10,171 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். மேலும், இந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,033 பேரும், ஜெர்மனியிலிருந்து 2,426 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,806 பேர் மற்றும் சீனாவிலிருந்து 1,803 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 335,766 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 154,174 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 119,592 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
