இலங்கைக்கு வருகைத் தந்துள்ள பெருமளவான வெளிநாட்டவர்கள்
செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி,
செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதிகரித்துள்ள எண்ணிக்கை
செப்டெம்பர் மாதத்திலும் 19,767 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,336 நபர்களும், ஜேர்மனியிலிருந்து 5,199 பேரும், ரஷ்யாவிலிருந்து 4,835 பேரும், சீனாவிலிருந்து 4,338 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 4,064 சுற்றுலாப் பயணிகளும் இந்த 20 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 979,540 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |