இலங்கையில் டித்வா புயலால் நிகழ்ந்த இழப்புகள்! வெளிவரவுள்ள அறிக்கை..
"இலங்கையில் டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்." இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(11) நடைபெற்றது.
நிகழ்ந்த இழப்புகள்
இதன்போது பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, "சில நிறுவனங்களால் உத்தேச இழப்பீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், முழுமையான விவரங்களே மிக முக்கியம். இதற்காகச் சில இடங்களில் உலக வங்கியின் உதவிகள் கோரப்பட்டுள்ளன.
அந்தவகையில் டிசம்பர் 15 முதல் 20 ஆம் திகதிக்குள் இழப்பு பற்றிய மதிப்பீட்டை வெளியிட முடியும் என நம்புகின்றோம்." என குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு..
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam