இலங்கையிடம் இருந்து கை நழுவும் ஆசிய கிண்ண தொடர்!
ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை நாட்டிற்கு வெளியே மாற்றுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஆசிய கிரிக்கெட் சபைக்கு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ஆசிய கிரிக்கட் சபையின் தலைவர் ஜெய் ஷாவிடம், இது தொடர்பான கோாிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் முடிவில்லை
இந்தநிலையில் இலங்கையின் கோரிக்கை தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று ஆசிய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் போட்டியை நடத்த முடியாது என்பதே பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.
இந்தநிலையில் போட்டித் தொடரின் இடம் மாற்றப்படுமானால், அது ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளே முன்னிலைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.