இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி
இலங்கை புதிய சுற்றுலா செயலியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா தொலைபேசி செயலியே அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
முச்சக்கரவண்டிகளைப் பதிவு செய்வதற்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் இந்த செயலி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலியில் உள்ளடங்கும் தகவல்கள்
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொலிஸார் செயலியை கண்காணிப்பதன் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படவுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணம் செலுத்தும் முறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், மார்ச் முதல் வாரத்தில் இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.