தென்னிந்தியாவுடன் பாலங்களை அமைத்தால் இலங்கை பாரிய வளர்ச்சியை பெறும்: ஹர்ச ஆரூடம்
இலங்கை தனது பொருளாதாரத்தைச் சுற்றியுள்ள சுவர்களைத் தகர்த்து, அண்டை பிராந்தியங்களுக்கு பாலங்களை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா(Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கு தென்னிந்தியா ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“தென்னிந்தியாவையும் அதன் வளர்ச்சியையும் பார்க்கும்போது, தமிழகப் பொருளாதாரம் 2030ல் 1 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள்
இப்போது தாம் இதனைக் கூறினால், ‘நாடு தமிழ்நாட்டுடன் சேர வேண்டும் என்று தாம் கூறுவதாக சில அரசியல்வாதிகள் கூறக்கூடும்.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக உள்ளன.” என கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கைப் பொருளாதாரத்தில், குறிப்பாக எரிசக்தித் துறையில் இந்திய முதலீடுகள் முன்மொழியப்படுவதற்கு தேசியவாத அமைப்புகளின் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ஹர்சவின் கருத்து வெளியாகியுள்ளது.
தேர்தலைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. கடினமான காரியங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல கடினமான விடயங்களை செய்துள்ளார். அதை ஏற்க வேண்டும் என்று ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்; சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதை அனுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஹர்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |