முழுமையாக ஸ்தம்பிதம் ஆகப்போகும் இலங்கை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது நஇறக்குமதி செய்யப்படும் டீசல் கையிருப்புகளை இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்தால் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் மின்சாரத்திற்காக எரிபொருள் வழங்கப்படவில்லை எனவும், டொலர்களை வழங்கினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை இலங்கை மின்சார சபையிடம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மின்சாரத்துக்கான டொலர்களை கண்டுபிடிக்க முடியாத விடயம் என தெரிவித்த அமைச்சர், மின்சாரத்திற்கு தேவையான டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற விடயத்தினை கண்டுபிடிப்பது அதற்கான அதிகாரிகளின் பொறுப்பாகும் என அவர் கூறியுள்ளார்.
டொலர் பற்றாக்குறையால் இலங்கை கடற்பரப்பில் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் டொலர் வழங்கினால் அதில் ஒன்றை உடனடியாக விடுவித்து டீசல் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளும், நாள் ஒன்றுக்கு 18000 டொலர் என்ற தாமத கட்டணத்தை செலுத்த நேரிடும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் மின்சாரம், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri