இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திர நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல்களை தொடுத்த வண்ணம் இருப்பதால் பல நாடுகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு தங்களின் நாட்டுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
அதேபோல் இலங்கையிலும் பல வெளிநாட்டினர் முடங்கி கிடக்கினர்.அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அத்தோடு அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்களைத் தொடர்ந்து, வெளிநாட்டு இராஜதந்திர தூதுவராலயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் இலங்கையில் வெளிநாட்டினருடன் தொடர்புடைய பல இடங்களில் இலங்கை காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களம் இன்று (03.02.2026) ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொது ஒழுங்கு அல்லது தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்தவொரு சம்பவங்களையும் தடுக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.