200 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் மூன்று விமான நிலையங்கள்
இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் கடந்த நான்கு வருடங்களில் இருநூறு கோடிக்கும் அதிகமான பாரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள்
2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விமான நிலையத்தின் இழப்பு 169 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 46 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பி்டப்பட்டு்ள்ளது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வருடத்திற்கு பதின்மூன்று விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
