ஆசிரியைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாடசாலைகளுக்கு வரும் போது புடவை அணியாத பெண் ஆசிரியைகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அழைப்பாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் எச்சரித்துள்ளார். .
சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக அரச ஊழியர்களை வசதியான உடையில் பணிக்கு வருமாறு கூறப்பட்டமையால் அவர்கள் அந்த சுற்றறிக்கைக்கமைய, செயற்பட்டதாகவும் அது சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்களும் அரசாங்க ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கும் அதே உரிமை உண்டு.
புடவை அணிவதற்கு யாருக்கும் உரிமை உண்டு எனவும் அது அவர்களின் விருப்பப்படி நடப்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
