இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன் துறை தொகுதிக்கிளை தெரிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன் துறை தொகுதிக்கிளை தெரிவு இன்று (21) மாலை 5.00 மணியளவில் மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற புதிய நிர்வாகத் தெரிவில் காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் தலைவராக வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனும், உப தலைவராக வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசாவும், செயலாளராக வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ்யும், உப செயலாளராக முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸிம், பொருளாளராக வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கரும் தெரிவானர்.
இத்தோடு 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில் நிர்வாக முக்கிய பொறுப்புக்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரம் தவிர்ந்த ஏனைய வட்டாரங்களுக்கு பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவுசெய்யப்பட்டனர்.
குறிப்பாக எதிர் காலத்தில் பொது மக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்கு சிறந்த பணியாற்றுவதே இப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் குறிப்பிட்டிருந்மை சுட்டிக்காட்டத்தக்கது.







