தமிழர்களின் பிரதேசங்களை அபகரிக்க கடும் முயற்சி! வலுக்கும் எதிர்ப்பு
நாட்டில் தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி, புத்தசாசன அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.
இவ்வாறு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,




