தமிழ்நாட்டில் இலங்கையர் ஒருவரின் மோசமான செயல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழ்நாட்டில், 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2022 ஜனவரியில் குறித்த நபர் சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறுமியின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு
தமிழ்நாடு மண்டபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த 52 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் இலங்கை நபருக்கு 5,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அபராதத்தை செலுத்தத் தவறினால் குற்றவாளி மேலும் 6 மாதங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்க பரிசீலிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |