மோடியை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்...! விக்னேஸ்வரன் வீட்டில் முக்கிய கூட்டம் - செய்திகளின் தொகுப்பு (Video)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழ் மக்களின் நிலைகள் குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கட்சிகளைச் சேர்ந்த ஏழு கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்பத் தயாராக உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு தூதர்கள், ஐ.நாவுக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் இறுதி வரைவை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், யாழ்ப்பாணத்தில் நேற்று அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உடனடியாக கடிதத்தை அனுப்புவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாங்கள் மீளவும் கூடியே தீர்மானம் எடுக்கவுள்ளோம்.
இன்று சில கட்சி தலைவர்கள் வருகைதராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு
ஈரானை நோக்கி நகரும் யுத்தம்!! போர் ஒத்திகைகளை ஏற்கனவே முடித்துக் கொண்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |