வடக்கு கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம்! யாழ். வலய சட்டத்தரணிகளின் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண வலய சட்டத்தரணிகள் வடக்கு கிழக்கில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிர்வாக முடக்கலுக்கு பூரண ஆதரவு தெரிவித்து யாழ். வலய நீதிமன்றங்களில் முன்னிலையாகமாட்டார்கள் என அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க யாழ்ப்பாண வலய தலைவரும் யாழ்ப்பாண நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கதலைவருமான பாலசுப்பிரமணியம் தவபாலன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே நிர்வாக முடக்கலுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ். வலயத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய ஐந்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகாது பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam