தமிழர்களின் கண்ணீரையும் தென்னிலங்கை பிரச்சினைகளையும் ஒப்பிட முடியாது.. வெளியான கருத்து
வடக்கு கிழக்கில் நடந்த இன அழிப்பையும் தென்னிலங்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் ஐக்கிய நாடுகள் சபை கூட ஒப்பிட்டு பார்க்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து எமது உறவுகளை தேடி உள்ளக பொறிமுறை நம்பிக்கை இழந்தவர்களாக சர்வதேச நீதி பொறிமுறை ஊடாகத்தான் நமக்கான தீர்வு கிட்டும் என்கின்ற நம்பிக்கையோடு இத்தனை வருடங்களாக 2025 கடக்க போகின்ற நிலையிலும் சர்வதேச பொறிமுறை ஊடாகத்தான் நீதி வேண்டும் என நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.
தொடர் போராட்டங்கள்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்திலும் கூட நாங்கள் சர்வதேச நீதியை கோரித்தான் பாரிய போராட்டமாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றது.
ஆனால் அது இடம்பெற்று இப்போது 66 ஆவது கூட்டத்துடன் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஐ.நாவில் காணாமல் ஆக்கப்பட்ட விடைய பரப்பை உள்ளக பொறிமுறை ஊடாக நாங்கள் அவர்களுக்கு தீர்வு கொடுப்போம் என வெளிவிவகார அமைச்சர் முதல் உரையிலே கூறி இருக்கின்றார்.
இத்தனை வருடங்கள் 2018ஆம் ஆண்டு இந்த காணாமல் போனோர் அலுவலகம் என்கின்ற விடயத்தை இலங்கையில் நியமித்தார்கள் அதற்கான சட்டம் வந்தது 2016 ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்படும் இடம்பெற்றது.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இந்த காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்கினார்கள். தற்போது ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து அவர்கள் தரவுகளை மாத்திரமே பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
