காணிப் பிரச்சினைகளை இப்பொழுதிருக்கும் சாதகத்தைப் பயன்படுத்தித் தீர்ப்பதே புத்திசாலித்தனம்! எஸ்.எம்.எம். முஷாரப்
காணிப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லாமல் இப்பொழுதிருக்கும் சாதகத்தைப் பயன்படுத்தித் தீர்ப்பதே புத்திசாலித்தனம் எனவும், இப்பொழுது வரை புரையோடிப் போயிருக்கும் நீண்ட காலக் காணிப் பிரச்சிiனையை இனிவரும் இளைய சந்ததியினருக்கும் விட்டுவைத்துச் செல்லலாகாது என தான் அவாக் கொண்டு கருமமாற்றுவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஊடகவியலாளருமான எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.
காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் கடந்த கால அனுபவக் கற்றல் விளக்கமளிக்கும் சமர்ப்பணத்தில் பங்குபற்றுநராகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”நான் ஊடகத்தில் பணியாற்றிய காலம் தொடக்கம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டிருக்கும் இன்றுவரை இந்த காணிப் பிரச்சினைத் தீர்வுக்காக செயற்பட்டு வருகின்றேன்.
காணிப் பிரச்சினை
காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியும் அர்த்புஷ்டியுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்திருக்கிறது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்வின்றித் தொடரும் இந்தக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட வேண்டும் முடிவுகள் வரவேண்டும். காணியை இழந்த பல காணிச் சொந்தக்காரர்கள் தங்கள் காணிகளை அடைந்து கொள்ள முடியாமலேயே மரணித்து விட்ட துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது பிள்ளைகளுக்கு தங்களது காணிகள் எங்கே காணி இருக்கிறது என்றும் தெரியாது.
காணிகள் விடயத்தில் சகல சமூகத்தாரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வனஜீவராசிகள் திணைக்களம். வனப் பரிபாலனத் திணைக்களம், என்பவை காணியை இழந்த விவசாயிகளின் எதிர்முகாம்களாக இருந்து செயற்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
காணித் தீர்வு விடயத்தில் இடைஞ்சலாகவும் பெரும் பிரளயத்தை உண்டுபண்ணுபவர்களாகவும் இவ்விரு திணைக்களத்தாரும் செயற்பட்டு வருகின்றார்கள். உணவுப் பஞ்சம் பொருளாதார நலிவு ஆகிய நாட்டு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இப்பொழுது ஜனாதிபதி அமைச்சரவை எடுத்த நிலைப்பாடுகளால் காணிப் பிரச்சினைக்கு ஒருபடியாக தீர்வுகளைப் பெறக்கூடிய சாதக நிலை கூடுதலாகக் காணப்படுகின்றது.
காணிப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுபவதற்கான முடிவு நிலைக்கும் சில இடங்களில் வந்துள்ளேன். காணி விடுதலை என்றாலே வடமாகாணத்தை சம்பந்தப்படுத்திப் பார்க்கும் ஒரு பார்வை உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் காணிகள் விடுவிப்பதில் கரிசனையாக இருந்தார். ஆனால் அது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவில்லை. இப்பொழுது அம்பாறை மாவட்டம் கரிசனையில் உள்ளது. காணி விடுவிப்பு ஆணைக்குழு விரைவில் அம்பாறை மாவட்டத்ற்கு பிரசன்னமாகும் என நம்புகிறேன்.
அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் துறைசார்ந்த அறிவற்ற நிலைமையே காணிப் பிரச்சினைகள் இழுபட்டுச் செல்வதற்கு பிரதான காரணமாய் அமைந்துள்ளது.” என்றார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
