கனடா - இந்தியா இடையே வலுக்கும் மோதல்: ஆதரவு தொடர்பில் இலங்கை வெளியிட்ட தகவல்
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஆதரவு இந்தியாவுக்குத்தான் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியிரந்தார்.
அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு இந்தியா வெளியேற்றியது.
கனடாவின் குற்றச்சாட்டு
மேலும், கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது .
இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரான மிலிந்த மொரகொட, கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது நாடு தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் பதில் உறுதியானதாகவும் நேரடியாகவும் உள்ளது என தான் கருதுவதாகவும், இந்த விடயத்தில் இந்தியாவை இலங்கை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.