IMF முடிவால் திண்டாடும் இலங்கை! மறைக்கப்படும் மக்களுக்கான கடைசி சந்தர்ப்பம் (VIDEO)
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் பெரும்பாலும் அந்த நாட்டினுடைய பெரும்பாலான மக்களை சந்தோசப்படுத்துவதாக நிச்சயம் இருக்க முடியாது என கலாநிதி கணேசமூர்த்தி பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைகழகம்) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்தை்தையின் போது முக்கியமாக கடன்களை மீள சீரமைத்துவிட்டு,கடன் வழங்கியவர்களிடம் சென்று அவற்றினை எவ்வாறு மீள செலுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து,அதற்குரிய சட்ட வல்லுநர்களையும், நிதி ஆலோசகர்களையும் நியமித்த பிறகு அவர்களோடு பேசிவிட்டு வாருங்கள் பணம் தருகின்றோம் என்று கூறியுள்ளனரே தவிர வந்தவுடன் பணத்தினை தருவதாக சர்வதேச நாணய நிதியம் கூறியதாக தகவல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த நடவடிக்கை உடனடியாக இடம்பெறும் விடயம் அல்ல.இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரனையும்,ஆலோசனையும் இலங்கைக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தொடர்பில் தான் தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
