இந்திய ராணுவ படைகளால் தடுமாறிய இலங்கை: யுத்த நிலவரத்தை வெளியிடும் முன்னாள் இராணுவத்தளபதி-அரசியல் பார்வை
இராணுவ நிர்வாகத்திற்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டில் யுத்தம் இல்லை ஆகவே பாதுகாப்பு துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது. முன்னறிவிப்பு விடுத்ததன் பின்னர் நாட்டில் பாதிப்பு ஏற்படாது.
ஆகவே பாதுகாப்பு துறை எந்நிலையிலும் அவதானத்துடனும், முன்னேற்றகரமாகவும் காணப்பட வேண்டும். அனர்த்தம் ஒன்று நேர்ந்ததன் பின்னர் பாதுகாப்பு படையினரை பலப்படுத்த அவதானம் செலுத்த முடியாது.
யுத்த காலத்திற்கு முன்னர் 11 ஆயிரம் இராணுவத்தினரே இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு படை பலத்தில் முன்னேற்றமடைந்து செல்வதை கண்டே, இராணுவத்தை பலப்படுத்தினோம்.
விடுதலை புலிகளின் யுத்த உபகரணங்களை அறிந்ததன் பின்னரே இராணுவத்திற்கு பாதுகாப்பு உபரணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.இவ்வாறான நிலையில் தான் யுத்தம் 30 வருட காலம் நீண்டு சென்றது.
எமது விருப்பத்துடன் இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தரவில்லை. இந்திய படைகளை எம்மால் தடுக்கவும் முடியவில்லை.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது அரசியல் பார்வை தொகுப்பு,





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
