இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு
அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன வழமை போன்று செயற்படுவதாக அதன் பிரதானிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் சகல அலுவல்களும் வழமை போன்று நடைபெறுவதாக அதன் பொதுமுகாமையாளர் ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்றைய தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பின் மத்தியிலும், இலங்கை வங்கியின் 265 கிளைகளில் எந்தவொரு கிளையும் மூடப்படவோ அல்லது சேவைகளில் தடங்கல் ஏற்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வழமை போன்று இயங்கும்

அதே போன்று மக்கள் வங்கியின் 340 கிளைகளில் இன்றைய தினம் 272 கிளைகள் வழமை போன்று இயங்குவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் 75 வீதமான ஊழியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் ஊழியர் சங்கப் பிரநிதிகள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரம் அருகே ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
You May Like This Video
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan