உலகளாவிய ஆடைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள இலங்கை
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் (EDB) பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் அரச செயலகத்திற்கும் இடையிலான உலகளாவிய ஆடைத் திட்டம் தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆடை கைத்தொழில் துறைக்கான உலகளாவிய ஆடை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான செயலகத்திற்கும் EDBக்கும் இடையில் திட்ட உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு முன்மொழியப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல்
இந்த உடன்படிக்கையில் நுழைவதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்து தரமான தயாரிப்புகளை நோக்கி நகரும் பணியின் அடிப்படையில் ஆடை அலங்காரம் மற்றும் ஆடை தொழிற்துறையின் மாற்றத்திற்கான உலகளாவிய ஆதரவை இலங்கை பெற முடியும்.
இதன்படி, மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
