கடந்த 500 வருடங்களில் இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 500 வருடங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில், 104 கப்பல்களும், விபத்துக்குள்ளான 5 விமானங்களும் கடலில் மூழ்கியுள்ளதாக இலங்கையின் தேசிய கப்பல் விபத்துகள் தொடர்பான அறிக்கையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மற்றும் காலி கடற்பரப்புக்களை உள்ளடக்கிய பகுதிகளிலே குறித்த கப்பல்களும் விமானங்களும் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தம்
இரண்டாம் உலக மகா யுத்த காலப்பகுதிக்குரிய விமானங்கள், ஒல்லாந்தர் யுகத்திலும் அதற்கு முந்தைய காலப்பகுதியை சேர்ந்த கடற்படைக்கு சொந்தமான கப்பலின் சிதைவுகளும் குறித்த கடற்பிராந்தியங்களில் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் தொல்பொருளியல் நிறுவனம்
இலங்கை கடற்பரப்புகளில் மூழ்கியுள்ள குறித்த கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிதைவுகளை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, கடல்சார் தொல்பொருளியல் நிறுவனத்தின் ஊடாக வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய கலாசார நிதியம் குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
