விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இலங்கையின் படம்
இலங்கையின் கண்கவர் தோற்றத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் அனில் மேனன் படம்பிடித்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தை அவர் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
சுமார் 400 கிலோமீற்றர் உயரத்திலிருந்து குறித்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரப்படும் புகைப்படம்
இந்தப் புகைப்படம் இலங்கை சமூக வலைத்தளப் பயனர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளிப் படையின் கேணலும், அவசரகால மருத்துவ நிபுணருமான அனில் மேனன், 2026 ஜூலை மாதம் Soyuz MS-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார்.
எட்டு மாத கால விண்வெளிப் பயணத்தில் பங்கேற்றுள்ள அவர், 74 மற்றும் 75ஆவது விண்வெளிப் பயணக் குழுக்களின் வானூர்தி பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.