ஆபிரிக்க நாடான கொங்கோவிடம் தடுப்பூசியை கோரும் இலங்கை
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் அஸ்ரா செனகா தடுப்பூசி தொகை ஒன்றை இலங்கைக்கு வழங்க முடியுமா என இலங்கை அரசாங்கம், ஆபிரிக்காவின் கொங்கோ அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொங்கோ ஜனாதிபதியிடம் விசேட கடிதம் மூலம் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள எஸ்ராசோனிகா தடுப்பூசி தொகை கொங்கோ நாட்டில் இருப்பதன் காரணமாக அதில் ஒரு தொகை விலை கொடுத்து வாங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை முதலில் செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை செலுத்த அந்த தடுப்பூசி இல்லை என்ற காரணத்தினால் இலங்கை , கொங்கோவிடம் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
கொங்கோ நாட்டில் 13 லட்சம் தடுப்பூசி மேலதிகமாக கையிருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தவிர இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இதே போன்ற கடிதங்களை அனுப்பியுள்ளது.

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகரின் மனைவி.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam
