எரிபொருள் நெருக்கடிக்கு ரஷ்யாவின் உதவியை நாடும் இலங்கை
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ரஷ்யா தற்போது பரிசீலித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் அச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"கொழும்பிற்கு மாஸ்கோ எவ்வாறு உதவ முடியும் என்ற கேள்வி இன்னும் பரிசீலனையில் உள்ளது மற்றும் உறுதியான நடவடிக்கைகளைப் பற்றி பேசுவது மிக விரைவில் நடைபெறும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ரஷ்யா உதவுமா..!
ரஷ்ய தூதரகத்தின் முதல் செயலாளர் அனஸ்தேசியா ஹத்லோவா, இலங்கையின் கோரிக்கையை ரஷ்ய கூட்டமைப்பு ஆதரிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வருவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இலங்கையின் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான ஊடகச் செய்திகளையும் ஹத்லோவா மறுத்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. அதில் ரஷ்யாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய உதவி (Photos) |