ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் செய்த இராணுவத்தினர்:வெளியாகியுள்ள காணொளி
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டகாரர்கள் நேற்று நுழைய முயற்சித்த போது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
අනේ කටු කණ විරු බල්ලෝ! තොපි මිනිසුන්ගේ සල්ලි වලින් උන්ටම වෙඩි තියනවා..
— Evil Savior (@EvilSavior7) July 10, 2022
තොපිත් එකයි, උනුත් එකයි.. ? pic.twitter.com/QpqcGkdX2v
இது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் இருக்கும் படையினர் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்கின்றனர். சம்பவத்தில் எவரும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டதுடன் போராட்டகார்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.



