தேசிய கால்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி (Photos)
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற கால்பந்தாட்ட சுற்று போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை சுவீகரித்து கொண்ட மன் /புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணியினரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் இன்றைய தினம் (13.10.2023) நடத்தப்பட்டுள்ளது.
கௌரவிக்கும் நிகழ்வு
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில் வடக்கில் உள்ள பல முன்னணி பாடசாலைகளை வெற்றிகொண்டு தேசிய ரீதியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உதைபந்தாட்ட அணி இரண்டாம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் விதமாக இன்றைய தினம் (13.10.2023) காலை மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் இருந்து மன்னார் பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டு மதிப்பளிக்கபட்டனர்.
இதனையடுத்து இந்த நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசுகளும் பயிற்சியாளர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்நிகழ்வில் மன்னார் வலயக் கல்வி பணிமனையின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் பி.ஞானராஜ், விளையாட்டு துறை ஆசிரியர் ஆலோசகர் ஜேக்கப், முன்னாள் அதிபர் ஜூட், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலில் இருக்கும் இரு இலங்கையர்கள் தொடர்பில் கவலைக்குரிய செய்தி : இரத்துச் செய்யப்பட்டுள்ள பயணங்கள்














ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
