தடை விதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டது: பந்துல தகவல்
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த தடை விதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் யோசனை
அவற்றினை கருத்திற்கொண்டு, குறித்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தடை செய்வதற்கு மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜனாதிபதி யோசனை சமர்ப்பித்திருந்தார்.
அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |