முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம்! எட்டப்பட்டுள்ள தீர்மானம்

Mullaitivu Sri Lankan Schools
By Theepan May 03, 2023 09:41 PM GMT
Report

''முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம் தொடர்பில் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது'' என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட (செயலாற்றல்) இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம்! எட்டப்பட்டுள்ள தீர்மானம் | Sri Lanka School Student Service By Bus Mullaitivu

பாடசாலை மாணவர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவும் பல்வேறு தரப்பினருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே இவ்விடயம் தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பதில் பிராந்திய முகாமையாளர்  தெரிவித்ததாவது, 

‘‘இன்று (3.05.2023) பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் ஏற்றாமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வருகை தந்து இந்த விடயம் தொடர்பான விளக்கத்தை வழங்கினோம்.

பாடசாலை மாணவர்களை ஏற்றவேண்டியது கட்டாயம் என்பதனால் அவர்களை கட்டாயம் ஏற்ற வேண்டும்.

அறிவுறுத்தல் 

வடமாகாணத்துக்கு உட்பட்ட சகல சாலை முகாமையாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம்.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்லும் விவகாரம்! எட்டப்பட்டுள்ள தீர்மானம் | Sri Lanka School Student Service By Bus Mullaitivu

அதைவிட வெளி மாகாணங்களில் இருந்து வருகின்ற பேருந்துகள் ஏற்றவேண்டும் என சம்மந்தப்பட்ட பேருந்துகளின் பிராந்தியத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவித்திருந்த போதும் சில பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணமிருந்தது.

நேற்றைய தினம் (2.05.2023) நாங்கள் நேரடியாக சென்று பேருந்துகள் ஏற்றாது செல்வது தொடர்பாக பார்வையிட்டு அறிக்கைகளை தயாரித்துள்ளோம்.

அங்கு மாணவர்களை ஏற்றாது சென்ற பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான கொழும்பு பேருந்துக்கு சாலை முகாமையாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதேபோல் வெளி மாகாண பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு அறிவித்து அவர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆகவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது உரிய நடவடிக்கைகள் நாங்கள் மேற்கொள்வோம்‘‘ என்று தெரிவித்துள்ளார். 


மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US