மாணவர்களின் உயிரை பறிக்கும் வாகன பேரணி!காணொளியில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்
குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெறும் பிக் மேட்ச்(Big Match) போட்டியில் கலந்துக்கொண்ட மாணவர்கள் குழுவொன்று விபத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விபத்தில் சிக்கிய மாணவர்கள் குழு
ஹம்பாந்தோட்டை-வீரகெடிய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது வீதியில் வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் செலுத்தப்படுவதுடன், மாணவர்கள் குழுவொன்று விபத்தில் சிக்குவதும் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
தங்காலை பிரதேசத்தில் வாகன பேரணி சென்றபோது இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
பல்வேறு விபத்துக்கள்
இதேவேளை நேற்று முன்தினம்(07.04.2023) இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்காக காலி வீதியை அலங்கரிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி பதுளை பிரதேசத்தில் பிக் மேட்ச் போட்டி இடம்பெற்றது.
இதன்போது வீதியில் வாகன கண்காட்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்ததுடன் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களில் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியினால் பல்வேறு விபத்துக்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
