இலங்கை தயாராக இல்லை! 2000 ஆயிரம் கோடிக்கு அதிமான ஆசியாவின் ராணியை வழங்க மறுப்பு (Video)
இலங்கையில் கண்டுபிடிக்கப்ட்ட ஆசியாவின் ராணி என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கல்லை டுபாய் நிறுவனமொன்று வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்காக 100 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது. அதன் இலங்கை பெறுமதி 2000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும். டுபாய் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் வினவிய போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அந்த விலையில் இரத்தினக்கற்களை வழங்க இலங்கை தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
310 கிலோ கிராம் நிறையுடைய ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் இந்த நீல இரத்தினக்கல் இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகுமாறு மகிந்தவிற்கு கடும் அழுத்தம்! - நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |