கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கையின் ஆளில்லா மர்ம படகு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று இன்று (20) காலை கரை ஒதுங்கியுள்ளது.
அப்பகுதி கடற்தொழிலாளர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக கோடியக்கரை சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரியின் உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த படகில் (OFRP-A-0851 KCH ) என்ற இலக்கம் காணப்படுகின்றது.
குறித்த படகு கடற்தொழிலுக்கா அல்லது கடத்தலுக்கா பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும், இப் படகில் யாராவது வந்தார்களா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கியூ பிரிவு காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 13 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri