முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதனின் சோகக் கதை
இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாக முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பினை சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான 45 வயதுடைய இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக உள்ளார்.
பாதணிகள்
இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்தில் இருக்கைகள் கிடைக்காவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 18 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri
