கிளிநொச்சியில் சிறீதரனின் முயற்சியால் முறியடிக்கப்பட்ட காணி அபகரிப்பு
கிளிநொச்சி (Kilinochchi) பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் நாடு கிராம அலுவலர் பிரிவில் 21 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டுப் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan)மற்றும் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே இரானுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள 21 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் நில அளவை மேற்கொள்வதற்கு இன்று (29.04.2024) நில அளவை திணைகள் அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்த நிலையிலேயே இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் கூடியிருந்த காணி உரிமையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் அளவீடு செய்வதை நிறுத்துமாறு ஆட்சேபனை தெரிவித்து கடிதங்களை வழங்கியியுள்ளனர்.
இதனையடுத்து அளவீட்டுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் காணி உரிமையாளர்களால் குறித்த காணிகளை மீட்டுத் தருமாறு கோரி பூநகரி பொலிஸ் நிலையத்தில் சிறீதரன் தலைமையில் சென்று முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
