2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி அணியில் இடம்பிடித்த சாமரி அத்தபத்து
இலங்கையின் கிரிக்கெட் வீராங்கனையான சாமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன மகளிர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.
9 போட்டிகளில் 45 ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான, தனது முதலாவது ஒருநாள் போட்டியை ஏப்ரல் மாதமே ஆரம்பித்தார்.
அரைசதம்
இதன்போது, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து, இறுதிப் போட்டியில் 195 ஓட்டங்களை பெற்று, தமது தொழில் வாழ்க்கையில் சிறந்த ஓட்டங்களை பதிவு செய்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கையின் சொந்தத் தொடரில் அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றது. இதன்போது இறுதிப்போட்டியில் சாமரி அத்தபத்து ஒரு அற்புதமான 91 ஓட்டங்களை பெற்றார்.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஆண்கள் டெஸ்ட் அணியில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் 2024 ஆம் ஆண்டில் கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்
அவர், பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தின் போது, முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri