மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் குறித்து வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு

Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Theepan Jan 24, 2025 04:57 PM GMT
Report

பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒவ்வொரு அழகியல் நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும் அழகியல் சங்கத்தினருக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

பிரிவலை தடை என்ற முடிவிற்கு வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

முறையற்ற நடவடிக்கை

குறிப்பாக ஒரு சில அழகியல் சங்கங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் குறித்து வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு | Hair Dressing For Sri Lanka School Students

சில சங்க உறுப்பினர்கள் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளுக்கும் துணைபோகின்றனர் என்றும், கடமை நேரத்தில் நாகரீகமற்ற முறையிலும் செயற்படுகின்றனர் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ஆளுநர், விரைவில் உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார மருத்துவ அதிகாரிகள், தொழிற்திணைக்களத்தினர், பொலிஸாருடன் கலந்துரையாடலை ஒழுங்கு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டம்

உரிமப் பத்திரம்

ஒழுங்குமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் அதனைக் கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் குறித்து வடக்கு ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு | Hair Dressing For Sri Lanka School Students

உள்ளூராட்சி மன்றங்களால் ஆண்டு தோறும் வியாபார உரிமத்துக்கான கட்டணம் அறவிடப்பட்டாலும், உரிமப் பத்திரம் வழங்கப்படுவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கின்றது என்றும் அழகியல் சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் பதிலளித்தார்.

மேலும் இராணுவத்தினரால் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் அழகியல் நிலையங்கள் இயக்கப்படுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் இராணுவத் தளபதியுடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

கைதிக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

கைதிக்கு போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US