எரிபொருள் விநியோகஸ்தர்களாக வெளிநாட்டவர்கள்! திடீரென நீக்கப்பட்ட நிபந்தனைகள்
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையை வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு வாய்ப்பளித்த விடயத்தில் நிபந்தனைகள் நீக்கப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விளைவாகக் குறித்த நிறுவனங்களுடன் உடன்படிக்கையை செய்துகொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அமைச்சரவை பத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இரண்டு முக்கியமான முன் நிபந்தனைகள் திருத்தப்பட்டுள்ளன.
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை
எரிபொருள் இறக்குமதியிலிருந்து, எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒரு வருடம் வரை, வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டிற்கு வெளியே எடுக்க அனுமதிக்கப்படாது.
அத்துடன் 9 மாதங்களுக்குப் பிறகுதான் வருமானத்தை டொலராக மாற்ற அனுமதிக்கப்படும் என்றும் பூர்வாங்க நிபந்தனைகளில் கூறப்பட்டிருந்தது.
அதேநேரம் மாதாந்த அடிப்படையில் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மதிப்பில் ஒரு சதவீதத்தை அமைச்சகம் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றும் ஒரு நிபந்தனையாகக் கூறப்பட்டிருந்தது.
எனினும் 2023 மே 22 அன்று சீனாவின் சினோபெக்குடன் உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு முன்னர் மே 19 அன்று அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இந்த இரண்டு நிபந்தனைகளும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |