2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6 பில்லியனை கடந்துள்ளது.
அதிகரித்துள்ள கையிருப்பு
செப்டம்பர் மாதத்தில் இல், 5,994 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு, ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் 6,467 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இது 7.9% அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஒக்டோபரில் 7.3% அதிகரித்து 6,383 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில், இந்த எண்ணிக்கை 5,949 மில்லியன் டொலராக இருந்தது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 5.8% அதிகரித்து 42 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
2020 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6 பில்லியன் டொலரைக் கடந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
