புதிய பேருந்து கட்டணம் 34 ரூபாவால் உயர்வு..! பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Dhushi Jul 03, 2026 12:17 PM GMT
Report

வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கமைய புதிய பேருந்து கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் புதிய கட்டணத் திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை(06.07.2026) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில், அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு நடத்துனருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் சுட்டெரிக்கும் வெப்பம் அலை - ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் சுட்டெரிக்கும் வெப்பம் அலை - ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு

சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம்

தேசிய போக்குவரத்து கட்டணக் கொள்கையொன்று உருவாக்கப்படும் வரையிலான ஓர் இடைக்கால நடவடிக்கையாக, 2026 ஜூன் 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 12 முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும் செலவுக் சுட்டெண்ணின் அடிப்படையில் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் 01 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படும். திருத்தப்பட்ட புதிய கட்டணத் திருத்தத்துக்கமைய, 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரப் பாதைகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 12 சதவீதம் அதிகரிக்கப்படும்.

புதிய பேருந்து கட்டணம் 34 ரூபாவால் உயர்வு..! பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு | Sri Lanka S New Bus Fares

இதேவேளை, 100 கிலோமீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட தூரப் பாதைகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டண அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 20 சதவீதம் கட்டண அதிகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.

100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரப் பாதைகளில் இயக்கப்படும் சொகுசு பேருந்து சேவைகளுக்கான கட்டணமும் 12 சதவீதம் அதிகரிக்கப்படும்.

100 கிலோமீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட தூரப் பாதைகளில் இயக்கப்படும் சொகுசு பேருந்து சேவைகளுக்கான கட்டண அமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு, 15 சதவீதம் கட்டண அதிகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.

பேருந்து கட்டணம் அதிகரிப்பு

அரை சொகுசு பேருந்து கட்டணங்கள் தொடர்பான வழக்கு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அரை சொகுசு சேவைகளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்ட சாதாரண பேருந்து கட்டணத்தைப் போல் 1.5 மடங்கு என்ற அடிப்படையில் தொடர்ந்து கணக்கிடப்படும்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அதி-சொகுசு பேருந்து சேவைகள் மற்றும் சாதாரண நெடுஞ்சாலை பேருந்து சேவைகள் ஆகியவை திருத்தப்பட்ட சொகுசு பேருந்து கட்டண அமைப்பிற்கு இணங்க கட்டணங்களை அறவிட முடியும் என்றும் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

புதிய பேருந்து கட்டணம் 34 ரூபாவால் உயர்வு..! பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு | Sri Lanka S New Bus Fares

மாகாணங்களுக்கு இடையேயான மற்றும் மாகாணங்களுக்கு உள்ளான பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை மட்டுமே அறிவிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை செய்திகள் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் அறவிடும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான முறைப்பாடுகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது 071 259 5555 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலமாகவோ முன்வைக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

400 ரூபா வரை உயர்ந்த அரிசி விலை - நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

400 ரூபா வரை உயர்ந்த அரிசி விலை - நுகர்வோருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு


மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US