இலங்கையின் முன்னணி பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் விரக்தியில்..!
2025, மார்ச் 9ஆம் திகதி அன்று ஆரம்பமாகி, சேர்பியாவின் நிஸ் நகரில் நடைபெறும் IBA மகளிர் உலக குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பிற்காக செல்ல விசா பெறத் தவறியதால், இலங்கையின் முன்னணி பெண் குத்துச்சண்டை வீராங்கனைகள் விரக்தியடைந்துள்ளனர்.
மூன்று அதிகாரிகளுடன் ஆறு பேர் கொண்ட அணி, மார்ச் 8ஆம் திகதியன்று, சேர்பியாவுக்கு செல்லவிருந்தது.
இதற்காக, தேவையான ஒப்புதல்களைப் பெற இலங்கை குத்துச்சண்டை சங்கம் மேற்கொண்ட விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குத்துச்சண்டை வீராங்கனைகள்
இருந்த போதிலும், இலங்கை அணி இறுதியில் தங்கள் திட்டமிடப்பட்ட விமானத்தில் ஏற முடியாமல் போயுள்ளது.

இலங்கையில் செர்பிய தூதரகம் இல்லாததால் விசா செயல்பாட்டில் ஒரு முக்கிய சவால் உருவானது, அனைத்து விண்ணப்பங்களும் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள சேர்பிய தூதரகத்தில் சமர்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாக விசா பணிகள் இடம்பெற்று வந்தன.
அதேநேரம், பயண மற்றும் தங்குமிட செலவுகளுக்கு சங்கத்திற்கு தோராயமாக, 8 மில்லியன் ருபாய் தேவைப்பட்டது. விளையாட்டு அமைச்சகம் மற்றும் பல நிறுவனங்களுக்கு முறையிட்ட போதிலும், எந்த நிதி உதவியும் வழங்கப்படவில்லை.
இதன் விளைவாக, குத்துச்சண்டை வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் விசா விண்ணப்பங்களுக்காக தங்கள் சொந்த பணத்தில் இருந்து தலா 85,000 ரூபாயை பங்களிக்க வேண்டியிருந்தது. எனினும் இந்த பயணம் தோல்வியில் முடிந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri