இலங்கையின் பயணம் இன்னும் முடியவில்லை: சர்வதேச நாணய நிதியம்
அண்மைய மாதங்களில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை சர்வதேசநாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது.
சில மிகவும் கடினமான மற்றும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகள் உண்மையில் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி, குறைந்த பணவீக்கம், அதிகரித்து வரும் சர்வதேச இருப்புக்கள், மேம்பட்ட நிதி வருமான வசூல் மற்றும் கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை ஆகிய பல முக்கிய குறிகாட்டிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்னேற்றங்கள், பொருளாதார நெருக்கடியின் உச்சத்திலிருந்து நாடு அடைந்த மிகப்பெரிய முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று கோசாக் வலியுறுத்தியுள்ளார். கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இலங்கைக்கான நிதியுதவி
இந்த நடவடிக்கைகள்,தமது நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டதும், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும். இந்த நிலையில், நிர்வாகக் குழுவின் முடிவுக்கான சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது சரியான நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக் உறுதிப்படுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
